Posts

அச்சுதாசர் Achudasar

சரியை, கிரியை, யோகம், ஞானமறிந்த மகான் அத்வைதம் பரப்பிய அச்சுதானந்த சாமிகள் மகான்கள், சித்தர்கள்,யோகிகள், ஞானியர் வரிசையில் 19ம் நூற்றாண்டில் ராமலிங்க அடிகளார், ராமகிருஷ்ண பரமஹம்சர்,  விவேகானந்தர், சச்சிதானந்த சாமிகள், சிவப்பிரகாசர்,  பாம்பன் சாமிகள் போன்றோர் அவதரித்தனர்.  அதேபோல் தொண்டை மண்டலத்தில் உள்ள போளூரில் 1850ம் ஆண்டு அப்பாய் என்ற பெயரில் தோன்றி, சம்பத்கிரி பிரம்ம பீடம் நிறுவியர்தான்  ஸ்ரீ அச்சுதானந்தன் சாமிகள்.   குழந்தை பருவத்தில் தந்தையையும், குமரன் பருவத்தில் தாயையும் இழந்தவர் அச்சுதானந்தன் (எ) அப்பாய்.  வளர்ந்து, ஆசிரியராகி, இலக்கண,இலக்கியங்களை கற்று, தமிழ், தெலுங்கு, வடமொழிகளில் புலமை பெற்றார்.  இசையிலும் புலமை பெற்று, ஆசிரியர் தொழிலை கைவிட்டு, பஜனை மந்திரம் நிறுவி,  ராமபிரானை வழிபட்டார்.  வேலூர் கஸ்பா வேங்கடகிருஷ்ணதாசர் என்ற வைணவப் பெரியவரை அப்பாய் தரிசிக்க சென்றபோது  அவரின் ஆற்றலைக்கண்டு '"அச்சுத தாசர்" என பெயர் சூட்டினார். கஸ்தம்பாடி 'தாயம்மை' என்பவரை அச்சுத தாசர் மணந்தாலும், இல்லறத்தில் நாட்டமின்றி,  இறைபக்தியிலேயே அதிகம் நாட்டம் கொண்டார். பொத்தரை